தொழில் மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET), 2027ஆம் கல்வி ஆண்டிற்கான தொழிற் கல்விப் பாடநெறிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 39 தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் பல்வேறு NVQ மட்டத்திலான முழுநேர மற்றும் பகுதிநேரப் பாடநெறிகளுக்கே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை mis.dtet.gov.lk என்ற இணைப்பின் ஊடாக சமர்ப்பிக்கலாம். அல்லது வர்த்தமானியில் உள்ள மாதிரி விண்ணப்பத்தை ஒத்த விண்ணப்பம் ஒன்றைத் தயாரித்துப் பூர்த்தி செய்து 2026.12.04 இற்கு முன்னர் உரிய தொழில்நுட்பவியல் / தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்ப முடியும்.
பாடநெறிகள் தொடர்பான மேலதிக விபரங்களை dtet.gov.lk என்ற இணையத்தின் மூலம் அல்லது 0112348893 / 0711997111 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
முழுநேரப் பாடநெறிகள் இலவசமாக நடாத்தப்படும்.
பதிவுக் கட்டணம் :
NVQ 3/4 பாடநெறிகளுக்கு - ரூபா 1,500
NVQ 5/6 மற்றும் மொழிப் பாடநெறிகளுக்கு - ரூபா 2,500
சலுகைகள்:
குறைந்த வருமானம் பெறும் முழுநேரப் பாடநெறி மாணவர்களுக்கு மாதாந்தம் 7,500 வரை தினசரிக் கொடுப்பனவொன்று வழங்கப்படும்.
முழுநேர மாணவர்களுக்கு பஸ் மற்றும் புகையிரத பருவகால சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பாடநெறிகளை நடாத்துவதற்குத் தேவையான பயிற்சிப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.

