முஜிபுர் ரஹ்மானின் “பாராளுமன்ற உரைகள் (2015 - 2020)” நூல் வெளியீட்டு விழா

Rihmy Hakeem
By -
0

 

முஜிபுர் ரஹ்மானின் “பாராளுமன்ற உரைகள் (2015 - 2020)” நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 07 இல் நடைபெறவுள்ளது!


இலங்கைப் பாராளுமன்றத்தில் தான் நிகழ்த்திய முக்கிய உரைகளைத் தொகுத்து, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் எழுதப்பட்ட “முஜிபுர் ரஹ்மான், பாராளுமன்ற உரைகள் (2015 - 2020)” எனும் நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 2026 டிசம்பர் 07 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (Banquet Hall) பி.ப. 3.30 மணிக்கு இந்த விழா இடம்பெறவுள்ளது.


2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள், நாட்டின் அபிவிருத்தி, சமூக நலன், கல்வி, பொருளாதாரம் மற்றும் தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் நிகழ்த்தப்பட்ட உரைகள், இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.


ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பணி, அவரது கருத்துக்கள், மக்களுக்காக அவர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த அவரது பார்வை ஆகியவற்றை, இந்நூல் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


அரசியலில் ஆர்வமுள்ளவர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ள ஆவணமாக இந்நூல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நூல் வெளியீட்டு விழாவில், அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏராளமான அபிமானிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்.


( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)