நிட்டம்புவ, ஓச்சட்வத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வாசிப்பு வார நிகழ்வுகள்

Rihmy Hakeem
By -
0


 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நிட்டம்புவ - ஓச்சட்வத்த முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலை நூலக வாரத்திற்கான (ஒக்டோபர் 26 முதல் ஒக்டோபர் 30 வரை) பல்வேறுபட்ட நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.


அதிபர் மற்றும் பொறுப்பாசிரியர்களின் தலைமையில் 5 நாட்களுக்குத் திட்டமிட்டிருந்த இந்நிகழ்வுகளில், காலைக் கூட்டத்தில் வாசிப்பு வாரத்தை அறிமுகம் செய்தல், வாசிப்பின்  முக்கியத்துவம் தொடர்பான சிந்தனைகளால் பாடசாலைச் சூழலையும் வகுப்பறையையும் அலங்கரித்தல், ஹொரகொல்ல பண்டார நாயக்க ஞாபகார்த்த நூலகத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்லல், வாசிப்புப் போட்டியை நடாத்தி ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் சிறந்த வாசிப்பாளர் ஒருவரை தெரிவு செய்து பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.


கலாநிதி றவூப் ஸெய்ன் அவர்களால் “வாசிக்கக் கற்போம் - எதிர்காலத்தை வெல்வோம்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


நிந்நிகழ்வுகளின் இறுதித் தினத்தில் வாசிப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறந்த வாசிப்பு மூலை அமைத்த வகுப்புக்களுக்கான பரிசுகள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.


தகவல் : சஸ்னா பானு நவாஸ்
















கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)