பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும். - அமைச்சர் அர்ஜுன வெயாங்கொடையில் தெரிவிப்பு( ஐ. ஏ. காதிர் கான் )

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
   எதிர்வரும் இரண்டு  வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெயாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
   இதன் முதற்கட்டமாக,  இலங்கைப்  போக்குவரத்துச்  சபைக்குச் சொந்தமான 25 முதல் 30 வரையிலான  பஸ்களை ஈடுபடுத்தவுள்ளோம்.
   முதற்கட்டமாக, கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, அடுத்த கட்டமாக தெரிவு செய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
   அலுவலக நேரங்களில் இந்த பஸ்கள்,  சேவையில் 
ஈடுபடுத்தப்படவுள்ளன. 
   குறிப்பாக, பெண்கள் மீதான துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாகவே,  இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment