கொவிட்-19 நோய் பரவிய காலத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மனித உரிமைகளை மீறிச் செயற்பட்ட 15 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கி இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
கொரோனா காலத்தில் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்ட 80 நாடுகளில் கூடுதலாக துன்புறுத்தல் இடம்பெற்ற 15 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் உள்ளது.
நைஜீரியா, கென்யா, தென் ஆபிரிக்கா, இலங்கை, எல்சல்வதோர், டொமினிகன் குடியரசு, பேரு,கொன்ரூஸ், ஜோர்தான், மொரோக்கோ, கம்போடியா, ஒஸ்பகிஸ்தான், ஈரான், ஹங்கேரியா ஆகிய நாடுகளே இந்த 15 நாடுகளாகும்.
இலங்கையில் ஊரடங்கச் சட்டத்தை மீறியதாக 26,800 பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
ஆட்கள் உணவைத் தேடிக் கொள்ள முடியாது கஷ்டப்படுவதனால் ஊரடங்கச் சட்டத்தை மீறி; இருப்பதாகவும் அவர்களைக்; கைது செய்வது தவறானது என்றும் ஐ.நா. அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
கருத்துச் சுதந்திர உரிமையும் மறுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம்; திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பஸெல் இதுபற்றி கருத்துத் தெரிவித்த பின்பே இந்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக