ஏப்ரல் 20ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஐந்தாயிரம் பஸ்கள் மற்றும் 400 ரயில் சேவைகளை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக , போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தம்பித்துள்ள அரசாங்க மற்றும் தனியார் துறைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. கடமைக்க சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு தேவையான முகவசங்களை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு அமைய, அனைத்து சேவைகளையும் வழமைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும்போது சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கடுமையாக அமுல்படுத்தவும் இந்த கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.