கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கீழ்வரும் பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 22 புதன் கிழமை மு.ப. 5.00 மணி முதல் பி.ப. 8.00 மணி வரை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பிரதேசங்கள்


  1. கொழும்பு மாவட்டம் - கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலபிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொதடுவை, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிசை, தெஹிவளை, கொஹுவலை
  2. கம்பஹா மாவட்டம் - ஜா எல, கொச்சிக்கடை, சீதுவை
  3. புத்தளம் மாவட்டம் - புத்தளம், மாரவிலை, வென்னப்புவை
  4. களுத்துறை மாவட்டம் - பண்டாரகமை, பயாகலை, பேருவலை, அளுத்கமை
மேலும்  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.