எதிர்வரும் 20ம் திகதி திங்கள் முதல்  நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு நிலைமையை ‎தளர்த்தி, மக்கள் ‎அன்றாட  நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம்  ‎தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்தன.‎

பிராந்திய சுகாதார பணிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள ‎திட்டங்களுக்கு அமைய, ‎அரசாங்கம் இது குறித்து கூடிய அவதானம் ‎செலுத்தியுள்ளதாக  அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.‎

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடைப்பிடிக்க வேண்டிய  சுகாதார ‎பாதுகாப்பு ‎நடைமுறைகளுடன் கூடிய இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு ‎தளர்வு  நடைமுறையாகும் என ‎அந்த தகவல்கள் உறுதி செய்தன.‎

எனினும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை ‎‎வழமைக்கு கொண்டு வரும்  போதும்,  சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு  ‎‎நிபந்தனைகளை அமுல் செய்ய தீர்மானித்துள்ள அரசாங்கம்,  தற்போதும் அபாய ‎‎வலயங்களாக உள்ள 6 மாவட்டங்களில் 4 மாவட்டங்களை தொடர்ந்தும் ஊரடங்கு ‎‎நிலைமையின் கீழேயே வைத்திருப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றது.‎

தற்போது மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை, கண்டி, ‎‎புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 நிர்வாக மாவட்டங்கள் கொரோனா அபாய வலயமாக ‎‎உள்ளன.‎

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல்  யாழ்ப்பாணம் மற்றும் கண்டியையும்   சாதாரண ‎‎நிலைமையின் கீழ் கொண்டுவர  சுகாதார ஆலோசனைகள்  அரசாங்கத்துக்கு கிடைக்கப் ‎‎பெற்றுள்ளது‎

எனினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களை ‎‎மட்டும் தொடர்ந்தும் ஊரடங்கு நிலைமையில் வைத்து கண்காணிக்க  இன்று காலை ‎‎வரையில் அரசாங்கம் இணங்கியிருந்தது.‎
இலங்கையில்  இன்று மாலை 6 மணியாகும் போதும், 3 வெளிநாட்டவர்கள் உட்பட  242 ‎‎கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். ‎

மொணராகலை, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, முல்லைதீவு, ‎மன்னார், கிளிநொச்சி, ‎ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய ‎மாவட்டங்களில்  கொரோனா தொற்றாளர்கள் ‎எவரும் பதிவாகவில்லை என  சுகாதார ‎அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவும் பிராந்திய சுகாதார ‎சேவைகள் ‎பணிப்பாளர்களும் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, இந்த 10 ‎‎மாவட்டங்களையும் விஷேடமாக, ஊரடங்கு நிலைமையில் இருந்து விடுவித்து, ‎அம்மாவட்டங்களில் ‎அன்றாட மக்கள் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர  ‎தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.‎ ‎

மற்றைய 15 மாவட்டங்களில் அபாய வலயங்களில் உள்ள கொழும்பு, கம்பஹா, ‎களுத்துறை, புத்தளம் ஆகிய  ‎மாவட்டங்கள் தவிர ஏனைய 11 மாவட்டங்களிலும் ‎இருக்கமான நடை முறைகளின் கீழ்  ஊரடங்கை திங்கள் ‎முதல் தளர்த்துவது குறித்து ‎அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.‎

‎ இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொது மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் ‎எவ்வாறு ஈடுபட ‎வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் விஷேட அறிவிப்பினை ‎வெளிப்படுத்தவும் தீர்மானித்துள்ளது.‎
‎ சுகாதார தரப்பினரிடம் இருந்து அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள பரிந்துரைகள் பிரகாரம், ‎‎கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட  மாவட்டங்களில் ( ‎‎அபாய வலய மாவட்டங்கள் தவிர) ஒவ்வொரு நாளும் முதற் கட்டமாக  காலை  6.00 ‎‎மணிக்கு ஊரடங்கை நீக்கி,  இரவு 8.00 மணிக்கு மீள அமுல் செய்வது குறித்தும் ‎‎சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.‎

தனியார், அரச ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தும் போது உரிய ‎‎நடைமுறைகளைப் பின்பற்றவும், தனியார் துறை ஊழியர்களின் சேவை  ஆரம்பத்தை ‎‎காலை 10.00 மணி முதல் முன்னெடுக்கவும்  ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ‎‎அனைத்து நிறுவங்களும் இரவு 8.00 மணிக்குள் தமது வேலை நேரத்தை மட்டுப்படுத்துவது ‎‎தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. ‎

இவ்வாறான படிப்படியான நடை ‎முறைகள் ஊடாக  அன்றாட மக்கள் வாழ்வை  ‎வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் ‎திட்டமிட்டுள்ளது.‎

‎ இதேவேளை தபாலகங்களில் குவிந்துள்ள தபால்களை  பகிரும் நடவடிக்கைகள் ‎‎எதிர்வரும் செவ்வாய் முதல் ஆரம்பிக்கப்படும், தபால் திணைக்களத்தில் ‎குவிக்கப்பட்டுள்ள கடிதங்கள் மற்றும் ‎பொதிகளை வகை பிரிக்கும் நடவடிக்கை ‎ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ‎தெரிவித்தார். , 3 ‎இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து ‎கிடப்பதாக ‎கூறினார்.‎

‎  எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில்  அபாய வலய ‎‎மாவட்டங்களில் 20 வீதமான ஊழியர்களும் அபாயமற்ற மாவட்டங்களில் 50 வீதமான ‎‎ஊழியர்களையும் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தபால் ‎‎மா அதிபர் இதனை குறிப்பிட்டார்.‎

Egypt extends coronavirus curfew until April 23 - Egypt Independent

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.