வெளிநாடுகளிலிருந்து வந்த 37 இலங்கையர்கள் 29 நாள் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த பின்னர் இன்று தத்தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்த இவர்கள், கந்தகாடு இராணுவ முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் 29 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருந்து, இன்று கொழும்பு, குருநாகல், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதிக நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான முதலாவது குழு இதுவென்றும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.