நாளை அவசரமாக கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

Rihmy Hakeem
By -
0

எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜனசூரிய தலைமையில், அரசமைப்புப் பேரவை அவசரமாகக் கூடவுள்ளது. கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாளை (23) காலை அரசமைப்புப் பேரவை கூடவுள்ளதாக, நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசமைப்புப் பேரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு சில தரப்புகள் முனைந்து வரும் நிலையில் அரசியலமைப்பு பேரவையின் அவசர கூட்டம் முக்கியத்துவம் பெருகின்றது.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)