பொதுத் தேர்தல் ஜுன் 20 ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்தைக் கலைப்பதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி செல்லுபடியற்றதாக மாறிவிடுகின்றது என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதானது, அரசியலமைப்பால் ஆணை வழங்கப்பட்டுள்ள வகையில், 2020 ஜுன் 02 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் மீளவும் கூட வேண்டும் என்ற இறுதித் திகதியைப் பிற்போடுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காடசி ஒன்றில் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் மேலும் தெரிவித்த அவர்,

புதிய பாராளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் கூட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த வகையில், அது எக்காரணத்துக்காகவேனும் நிறைவேறாது போனால், அக்கலைப்பு தொடர்பான பிரகடனம் செல்லுபடியற்றதாக மாறுகின்றது. அரசியலமைப்பின் 70 ஆம் பிரிவு இந்த நிபந்தனையை ஜனாதிபதி மீது விதிக்கின்றது என்று தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு நிலையில் அரசியலமைப்பு எதுவும் தெரிவிக்காத நிலையில், விசேட முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்நகிழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சரூக் தெரிவித்தார்.

இதேநேரம், 1989 ஜேவிபி கிளர்ச்சியின்போதும் தேர்தல் நடந்ததாகவும், புதிய பொறிமுறையொன்று கொண்டுவரப்பட்டு, வழமையான தேர்தல் பிரசாரங்களா அல்லது வேறு வகையான பிரசாரங்களா என்பதையும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.