பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு செயலணி - வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு செயலணி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இச்செயலணி அமைக்கப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி பொருளாதார புத்தெழுச்சியை திட்டமிடுதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துகள்