- அனஸ் அப்பாஸ் -
புத்தளம் மாவட்டம் வென்னப்புவ தேர்தல் தொகுதியில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் கிராமம் புஜ்ஜம்பொல. இக்கிராமத்தில் வாழும் பெரும்பாலானவர்களது வாழ்வாதாரம் கூலித் தொழிலாகும். கொவித்19 தொற்றால் புத்தளத்தில் நிலவும் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் இங்கு வாழும் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
சுமார் 111 குடும்பங்கள், அதில் 28 விதவைகள் வாழும் ஊரில் தனவந்தர்கள் எவரும் இல்லை என்பது கவலைக்குரிய விடயம். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு சுமார் 20 நாட்களாகும் நிலையில், உணவு கையிருப்புகளும் தீர்ந்து தமது தோட்டங்களில் இருக்கும் ஈரப்பலாக் காய்களைக் கொண்டு பசி தீர்க்கும் நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பல ஊர்களில் உலர் உணவு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் குறித்த ஊர் மக்கள் எவ்வித உதவிகளும் இன்றி தொடர்ந்தும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தை ஒரு உடம்பிற்கு ஒப்பிட்டார்கள் நபியவர்கள். உடம்பின் ஒரு பகுதி வலியை உணரும் என்றால் அதனால் முழு உடம்பும் துன்புறும் என்பதாக அதற்கு விளக்கமளித்தார்கள். அந்த உதாரணத்திற்கு அமைய அவர்களும் எமது சகோதரர்கள் தான். எம்மால் முடிந்ததை அந்த மக்களுக்கு கொடுப்போம்.
உதவிகள் செய்ய விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ள முடியும்.
சகோதரர். நியாஸ்
0772617124
நிதி பங்களிப்போர் கீழுள்ள வங்கிக் கணக்கிலக்கங்களில் வைப்பிலிட்டுவிட்டு மேலுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கவும்
H.M. Niyas
007020372479
HNB Bank
Pettah Branch
H.M Niyas
82381894
Bank of Ceylon
Dankotuwa Branch