எம்.ஏ.றமீஸ், எம்.எஸ்.எம். ஹனீபா
ஒலுவில் துறைமுகத்தின் ஒருபகுதியில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் ஐவருக்கு கொரோனா-கொவிட் 19 தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
ஜா-எல பிரதேசத்தில் இருந்து இம்மாதம் 09ஆம் திகதி இத்தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 28 பேரில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளதென, மருத்துவ பரிசோதனையின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜா-எல பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட இவர்கள், ஒலுவில் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள தனிமைப் படுத்தல் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கு முன்னர் இவர்களின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இவர்களின் பரிசோதனை அறிக்கை நேற்றைய தினம் (11) கிடைக்கப்பெற்றதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுள்ளவர்கள் என அடையாளப் படுத்தப்பட்ட ஐவரும் வேறாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.