இராணுவ படை வீரர் ஒருவர் தனது முகமூடிக்குள் 1 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான போதைவஸ்த்துக்களை மறைத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை ரஜவத்த பிரதேசத்தில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. களுத்துறை பலாதோட்ட பகுதியில் போதைவஸ்த்து விநியோகிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறிப்பிட்ட படை வீரர் பயணித்த மோட்டார் சைக்கிளை பரிசோதித்த போது இவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நபரை பொலிஸார் பரிசோதித்த போது அவரது முகமூடிக்குள் நுணுக்கமான முறையில் போதைவஸ்த்துக்களை மறைத்து வைத்திருப்பது கண்டுபடிக்கப்பட்டுள்ளது.
படை அடையாள அட்டையைப் பயன்படுத்தி இவர் போதைவஸ்த்து விநியோகத்தில் இவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார். போதைவஸ்த்துக்களுடன் இரு ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களும் (தற்காலிகம்) கண்டுபடிக்கப்பட்டுள்ளன. இவரது மனைவியும் பாதுகாப்புச் சேவையில் பணிபுரியும் ஓர் உத்தியோகத்தராவார்.
கருத்துகள்
கருத்துரையிடுக