பேலியகொடை மீன் சந்தை நாளை திறக்கப்படும்

Rihmy Hakeem
By -
0
பேலியகொட மீன் சந்தை கட்டடத்தை மொத்த விற்பனை நடவடிக்கைக்காக நாளையிலிருந்து மீண்டும் திறப்பதற்கு, பேலியகொட மீன் வர்த்தகச் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த மீன் சந்தையிலிருந்து மீன் கொள்வனவு செய்த பிலியந்தலையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்,கொரோனா தொற்றுக்கு உள்ளானதால், பேலியகொட மீன் சந்தை கட்டடத்தை மூடுவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, 22ஆம் திகதியிலிருந்து 3 நாள்களுக்கு இந்த சந்தைக் கட்டடம் மூடப்பட்டது.
இந்நிலையில் இங்கு பணிபுரிந்த 529 பணியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர்களுள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானது.
அதற்கமையவே, குறித்த மீன் சந்தையை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tamil Mirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)