கல்முனை "பீஸ் மீடியா மூவ்மன்ட்" தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மினின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு  உலர்  உணவு பொருட்களை  வழங்கியது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரானா  வைரஸ் பாதிப்பின் காரணமாக கல்முனை   பிரதேசத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின்   நலனை  கருத்தில் கொண்டு கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரால்  அப்பள்ளிவாசல்  பிரதேசத்துக்குள் வசிக்கும்  ஊடகவியலாளர்களுக்கு  அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்  தலைமையில்  நேற்று இரவு (12) பள்ளிவாசல் நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற  இந்நிகழ்வில்  குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 10 ஊடகவியலாளர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்  என்.எம்.நௌஸாத்  உட்பட நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கல்முனை "பீஸ் மீடியா மூவ்மன்ட்" தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மின் உட்பட கல்முனை முகைதீன் ஜும்மா பெரியபள்ளிவாசல் நிருவாகத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

பட உதவியும் தகவலும் - 
சிரேஷ்ட ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக்
East first







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.