ஒவ்வொரு காலத்திலும் மனித சமுதாயம் பல்வேறு சோதனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.....
சோதனைகளைக் கண்டு துவண்டுவிடக்கூடாது....
சோதனைகளில் இருந்து படிப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும் ....

நமக்கு வருகின்ற சோதனைகள் இரண்டு காரணங்களுக்காக ஏற்படலாம்...

1- நமக்கான தண்டனை
2- நமக்கான சோதனை

நாம் செய்கின்ற பாவங்களுக்கு இறைவன் தண்டனைகளை பல்வேறு வடிவத்தில் தருவான்...
அந்த நேரத்தில் நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் அதிகம் அதிகம் பாவமன்னிப்பு கேட்டு பாவங்களில் இருந்து முழுமையாக நீங்கிக் கொள்ள வேண்டும்...
இறைவன் மிக்க இரக்கமுள்ளவன்....
மிக மன்னிப்பவன்...

அதேபோல்,
நம்மை, நமது ஈமானை சோதிப்பதற்காக இறைவன் பல்வேறு வடிவத்திலும் சோதனைகளைத் தருவான்...

இத்தகைய நேரங்களில் நாம் அதிகம் பொறுமையைக் கையாள வேண்டும்...
அதிகம் அதிகம் நன்மைகளில் ஈடுபட வேண்டும்...
இறைவனின் திட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்...
பாவமன்னிப்புக்களையும் அதிகம் செய்ய வேண்டும்...

எது நடந்தாலும் அனைத்தும் இறைவனின் நாட்டம் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்...

இந்த உலகம் முஃமீன்களுக்கு சோதனைக் களம்...
இது அவனுக்கு சிறைச்சாலை...
எனவேதான் நபியவர்கள் கூட முஸ்லிமின் வாழ்க்கையை ஒரு பயணிக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்....
அதாவது,
ஒரு பிரயாணி தனது பிரயாணத்தின் கலைப்பு காரணமாக ஒரு மர நிழலில் தங்கி ஓய்வு எடுக்கின்றார்... கலைப்பு நீங்கியதும் தனது பயணத்தை அவர் தொடர்கின்றார்...

இந்தப் பிரயாணிக்கு அவர் இளைப்பாறிய மரநிழல் நிரந்தரமில்லை...
அவர் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்காக அவர் அந்த இடத்தைவிட்டும் செல்கின்றார்...

அதேபோல தான் நமது நிலையும்...
நமக்கு இந்த உலகம் நிரந்தரமில்லை...
எமது இலட்சியம் சுவர்க்கம் ...
அந்த இலட்சியத்தை அடைவதற்கான விளைநிலம் தான் இந்த உலகம்...
இங்கு சிறந்தவற்றை பயிரிட்டு நமது பயணத்தைத் தொடர வேண்டும்...

எனவே,
நிரந்தரமில்லா இந்த உலக வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடக்கூடாது...
மரணத்தை எண்ணி அஞ்சக் கூடாது....
எமது கவலைகளை, பிரச்சினைகளை அல்லாஹ்விடமே முழுமையாக ஒப்படைத்து விடவேண்டும்...

சோதனைக்காலமானது நமக்கான படிப்பினைக்குறிய காலமாகும்....
ஏனெனில்,
ஒருவன் பல வருடங்கள் ஆரோக்கிய நிலையில் கற்றுக்கொள்ள முடியாமல் போன விடங்களையெல்லாம் சில மணிநேர சோதனையில் கற்றுக்கொள்கின்றான் என்று கலாநிதி ராதிப் நாபுல்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே,
நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது தவறுக்கான தண்டனையாக இருந்தால் பாவமன்னிப்புக் கேட்டு திருந்திக் கொள்வோம், அவை நமக்கான சோதனைகளாக இருந்தால் அதிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்வோம்....

அனைத்தையும் மிகைக்கக்கூடிய இறைவன் எப்போதும் எம்முடன் இருக்கின்றான்...
அவன் எமக்கு சோதனைகளைத் தருவான்.
ஆனால்,
அவன் எம்மை ஒருபோதும் கைவிடமாட்டான்.

எனவே,
சுவனத்தை அடையும் நமது இலட்சியத்தில் உறுதியாகப் பயணிப்போம்....
என்றும் நமக்கு இறைவனே துணை!!
                             
                                    Writer :
                         Sasna Baanu Nawas
___________________________________________

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.