வீட்டுத்தோட்டமும் மனநலமும்  பகுதி 2

--------------------------------------

மன ஆரோக்கியம் தரும் வீட்டுத்தோட்டம் 

--------------------------------
வீட்டுத்தோட்ட பராமரிப்பால் மனதிற்கு கிடைக்கும் நன்மைகள் ஏராலம். அதுபற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில்; மேற்கொண்ட ஒரு ஆய்வில் மன ஓய்வுக்காக பயன்படுத்தும் ஏனைய செயற்பாடுகளைவிட தோட்டப்பாரமரிப்பு மனஉழைச்சலுக்கு எதிராக போராடக்கூடியது என கண்டரியப்பட்டுள்ளது.

மன உழைச்சல் நிறைந்த ஒரு வேலையில் ஈடுபட்டவர்களை இரு குழுவாகப்பிரித்து 30 நிமிடங்களை கொடுத்து புத்தகம் வாசிக்கவும் தோட்டவேலையில் ஈடுபடவும் ஆலோசனை வழங்கப்பட்டது. வாசிப்பில் ஈடுபட்ட குழுவினரை காட்டிலும் தோட்ட வேலைகளில் ஈடுபட்டவர்களின் மனநிலை நன்றாக இருந்ததாகவும் மனஉழைச்சல் ஹோமோனின் அளவு குறைவாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

நோர்வே நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் மன அழுத்தத்துடன் தொடர்பான நோய்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இணங்கண்டு அவர்களை கிழமையில் 6 மணித்தியாலங்கள் பூக்கள் மற்றும் மரக்கறிகள் நட பணிக்கப்பட்டனர். 3 மாதங்களின் பின் அவர்களில் அரைவாசியினர் மனஅழுத்த அறிகுறிகளிலிருந்து குணமடைந்து இருந்ததையும் அவர்களது மனநிலை சிறந்த மாற்றத்தை அடைந்திருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுகொண்டனர்.

வீட்டுத்தோட்டங்களை பராமரித்து மண்ணோடும் பயிரோடும் உறவை வளர்த்து வாழ்ந்த எமது பாட்டனும் பூட்டனும் நோயின்றி நீண்டகாலம் திடகாத்திரமாக வாழ்ந்ததற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை இன்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துக்காட்டப்படுவது ஆச்சரியமாக உள்ளது.

வீட்டுத்தோட்டப்பரிபாலனம் என்பது ஒரு மனமகிழ்ச்சியான செயற்பாடாகும். முதிய வயதை அன்மிக்கும் போது ஏற்படும் ‘டிமென்சியா’ எனும் முதுமை மறதிநோய் அதிகரிப்பின் ஆபத்து நிலையை குறைக்க தோட்டப்பராமரிப்பு துணைபுரிவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலும் உள்ளமும் இணைந்து தோட்ட வேலையில் ஈடுபடும் போது மனது அமைதியை அனுபவிக்க ஆரம்பிக்கிறது. எமது மனம் அமைதியாக இருக்கும் போது நாம் இருக்கும் சூழலும் அமைதியாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். மன இருக்கத்துடன் இருக்கும் ஒருவர் வீட்டுத்தோட்டத்தில் சில நிமிடங்கள் நடந்து திரிவது கூட ஒரு சிகிச்சை முறையாகவே கருதப்படுகிறது.
-----------------------------
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.