கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளில் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த 26ஆம் திகதி அனுப்பிய கடிதத்துக்கு, பதிலளித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு தேர்தலை நடத்துவதில் விரும்பமின்மை தெரிவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கொரோனாவுக்கு எதிரான போராடும் இந்த வேளையில் இவ்வாறான சுயலாப அரசியல் விடயங்கள் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.