இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதற்கு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Alaina B.Teplizt ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியை கட்டியெழுப்புவதற்கும், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையில் (NAITA) பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி பாடநெறிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கும் அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுத்தர முடியும் என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலப்பகுதிகளில் புதிய அரசாங்கத்தினால் கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தர முடியும் என்பதனையும், ஒத்துழைப்பு அவசியமாகும் துறைகள் பற்றிய தகவல்களை அதற்கென பெற்றுத் தருமாறும் இதன் போது தூதுவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.