நாட்டில் இன்று (15) மேலும் 05 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனவே கொவிட் தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது.
அவர்களது விபரம்:
- கொழும்பு 13, ஜிந்துபிட்டியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். நீண்ட காலமாக புற்றுநோயல் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஆண். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணித்துள்ளார். மரணத்திற்கான காரணம் புற்று நோய் மற்றும் கொவிட் நியுமோனியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 12 பிரதேசத்தினை சேர்ந்த 88 வயதான ஆண். நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொழும்பு 08 பொரல்ல பிரதேசத்தை சேர்ந்த 79 வயதான ஆண் என்பதுடன் அவர் வீட்டிலேயே மரணித்துள்ளார். இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணமடைந்துள்ளார்.இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.