கடந்த அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தின் போது மக்களுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக அதிகமான அரசியல் நிகழ்ச்சிகளையே நடாத்தியது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு தனது விம்பத்தை மேம்படுத்திக் காட்டுவதல்ல நோக்கம் மாறாக கிராமத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்வதே என்றும் அமைச்சர் கூறினார்.

வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கெளரவ பிரதமர் தனது அமைச்சுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அதனால் எங்களுக்கு இலகுவாக  இலக்கை நோக்கிச் செல்ல முடிந்தது என்றும் கூறிய அமைச்சர் கடந்த காலங்களில் சுமார் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய தொகுதியின்  மடம்பெல்ல கீழ், துனகஹ மற்றும்  கிதுல்வல கீழ் ஆகிய பிரதேசங்களில் கட்டப்பட்ட 3 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் இன்று (06) கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.  

அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின்படி இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வீடமைப்புத் திட்டம் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 14,022 வீடுகளைக் கொண்டதாகும்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.