'ஏனையோருக்கு கொரோனா பரப்பியதைப் போன்று, உங்களுக்கும் கொரோனாவை பரப்ப வேண்டும்'  என தெரிவித்து, பிரதான சிறை வாயில் காவலர் உள்ளிட்ட பலரை கட்டியணைத்த  சிறைச்சாலை காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வட்டரக்க சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென அவர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னர், விசேட கடமைகளுக்காக வட்டரக்க சிறைக்காவலர்கள் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் சில தினங்கள் மஹர சிறைச்சாலையில் கடமையாற்றிய பின்னர், மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு வந்துள்ளனர்.

இதன்போது பிரதான வாயில் காவலர், விசேட கடமைகளுக்காகச் சென்றவர்கள் 14 நாள்கள் சுயதனிமையில் இருப்பதற்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போதே குறித்த சிறைக்காவலர் இவ்வாறு அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(TM)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.