ஆளும்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சில அமைச்சர்களின் தூரநோக்கற்ற கருத்துக்கள் காரணமாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணையின் போது இலங்கைக்கு ஆதரவு வழங்கவிருந்த சில நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்காமல் போகும் சந்தர்ப்பம் இருப்பதாக ஜெனீவாவில் இருக்கும் எமது நாட்டுக்கான நிரந்தர பிரதிநிதி சீ.ஏ.சந்த்ரபிரேம விசனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலையில் இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா ஆடைகளை தடை செய்யும் தீர்மானம் பற்றி கருத்துக்கள் வெளியாகியிருந்தன. ஜெனீவா பிரேரணையின் போது இலங்கைக்கு ஆதரவு வழங்கவுள்ள நாடுகளில் பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகளாகும். இது தொடர்பில் கருத்தில் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த வாரம், புர்காவை தடை செய்யும் தீர்மானம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்த கூற்றை சீ.ஏ.சந்திரசேகர விசேடமாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)