ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், நாட்டரிசி ஒரு கிலோகிராம் ரூபா 93 க்கும், சிவப்பு மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் ரூபாய் 95 இற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதற்காக, சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு மேலதிகமாக தனியார் பல்பொருள் கடைகளுக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தேவையான அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.