கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (Siyane News)