இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, (நாணயச் சபை) 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது.

தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிதியியல் நிலைமைகளையும் ஆற்றல்வாய்ந்த மீளெழுச்சித் திட்டங்கள் கிடைக்காதிருப்பதனையும் பரிசீலனையில் கொண்டு, நாணயச் சபை 2020 யூலை 13ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிதிதொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினையும் அதன் தாய்க் கம்பனியான ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினையும் இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருந்ததுடன் வியாபார நடவடிக்கைகளை அவ்வாறு இடைநிறுத்துகின்ற காலம் 2021 சனவரி 12ஆம் நாள் வரை நடைமுறையிலிருந்தது. கம்பனி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் மூலதனத்தினை உள்ளீடு செய்வதன் மூலம் ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டங்களை வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தப்பட்ட திகதியிலிருந்து பெரும்பாலும் ஆறு (6) மாதங்கள் முடிவடைந்த பின்னரும் முன்வைக்கத் தவறியதுடன் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமை தொடர்ந்தும் மேலும் மோசமடைந்தது. (Siyane News)

முழுவடிவம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.