கொரோனா வைரஸ் பரவலால், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் காரணமாக மக்களை நெருக்கடிக்குள்ளாகாத வகையில் செயற்படுவது மக்கள் பிரதிநிதிகளதும், அதிகாரிகளதும் பொறுப்பு என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆளுநர்கள், மாகாண, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஊழல் மோசடிகளுக்கு இடங்கொடுக்காது, தேவையற்ற வகையில் நிதி செலவிடப்படாத வகையில், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையிலும் அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
தமிழ் மிரர்