கடுமையான மின்னல் அபாயம் : மேல் மாகாணம் உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Rihmy Hakeem
By -
0

 இன்று பி.பி. 2.30 முதல் நாளை (22) காலை 07.30 வரையான காலப்பகுதியில் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (Siyane News)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)