ஒக்டோபர் 16 முதல் 31 வரை நாட்டை மேலும் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்
- மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு ஒக்டோபர் 21 வரை இருக்கும்
- அத்தியாவசியமற்ற பயணங்கள் இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதிக்கப்பட மாட்டாது.
- திருமண நிகழ்வுகளுக்கு 50 பேருக்கு அனுமதி. திறந்த வெளி எனின் 75 பேருக்கு அனுமதி.
- கொவிட் அல்லாத மரணங்களுக்கு 20 பேருக்கு அனுமதி
- திரையரங்குகளில் ஒக்டோபர் 21 இன் பின்னர் 25% இனருக்கு அனுமதி
- ஆரம்ப பாடசாலைகளில் 50% இனருக்கு அனுமதி
- தனியார் வகுப்புகளுக்கு அனுமதி இல்லை
- வணக்கஸ்தலங்களில் கூட்டு செயற்பாடுகளுக்கு அனுமதி இல்லை. விஷேட உற்சவங்களின் போது பின்பற்றவேண்டிய வழிகாட்டல்கள் வெளியிடப்படும்
- தொழிற்பயிற்சி நிலையங்களில் 50% இனருக்கு அனுமதி
(Siyane News)