அத்துரலியே ரதன தேரர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!

Rihmy Hakeem
By -
0

 

அபே ஜன பல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

"அவர் அடிக்கடி கட்சியின் தீர்மானங்களுக்கு மாற்றமாக நடந்து கொண்டமை காரணமாக ஒழுக்காற்று நடவடிக்கைக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் அவர் ஆஜராகாததன் காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளோம்" என்று அபே ஜன பல கட்சியின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சுசந்த கொடிதுவக்கு தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)