50 நபர்களுக்கு மவ்லிதுர் றஸுல் ஓதுவதற்கு அனுமதி.....

இலங்கை முஸ்லிம் பெருமக்களுக்கும் மற்றும் பள்ளி வாசல்கள் நிர்வாகிகளுக்கும் முக்கியமான செய்தி !!!

எதிர் வரும் ஒக்டோபர் 19ம் திகதி எம் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ஸெய்யிதினா மௌலானா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை ஹயாதாக்குமுகமாக சகல பள்ளிவாசல்களிலும் COVID 19 சுகாதார வழிகாட்டலை பின்பற்றி மவ்லிதுர் றஸுல் 50 நபர்களுக்கு ஓதுவதற்கு சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அஸேல குணவர்தன அவர்கள் எனது வேண்டுகோளை ஏற்று அனுமதி வழங்கியுள்ளார்.

இன்ஷா அல்லாஹ் இதற்கான வழிகாட்டலை இலங்கை வக்ஃப் சபை வெகு விரைவில் அறிவிக்கும் வக்ஃப் சபையின் வழிகாட்டலை முற்றுமுழுதாக பின்பற்றி இந்த நன்நாளை ஹயாத்தாக்குமாரு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.


இப்படிக்கு

அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி.

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ பிரதமரின்

முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.