சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்றால் ஆபத்தான மற்றுமொரு கொவிட் அலை உருவாகும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவிந்த டி சொய்ஸா தெரிவித்தார்.
இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் சரியான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிடின் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.