மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இரு இளைஞர்கள் மோசமாக தாக்கப்படும் வீடியோவொன்று வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன் அவர் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

குறித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறித்த விடயம் தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தததுடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவருக்கு அனுப்பிய பதிலையும் ட்விட்டர் பதிவாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.