இலங்கையின் சிரேஷ்ட இலக்கியவாதி டெனிசன் பெரேரா (ටෙනිසන් පෙරේරා) அவர்கள் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் சிறுகதை, நாவல், மொழியாக்கம், விமர்சனத் துறைக்கு பெரும் பங்காற்றியவர். 'இலங்கை எழுத்தாளர் அமைப்பில்' நீண்ட காலம் தலைவராகக் பணியாற்றியவர்.

அவர் தனது வாழ்நாள் முழுதும் சேகரித்த விலைமதிக்க முடியாத நூல்கள் அடங்கிய நூலகத்தை இன்று (2021.11.18) மக்கள் விடுதலை முன்னணிக்கு  அன்பளிப்பு செய்தார்.

"சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக வருங்கால சந்ததியினர் பயன்படுத்துவதற்கு தனது நூலகத்தை JVPயிடம் அன்பளிப்பு செய்திருதார்".

இந்நூலகக் கொடையைப் பொறுப்பேற்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா மற்றும் சிரேஷ்ட இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.

-ஹிசாம் ஹுசைன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.