தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில், தமிழ் மொழியில் க.பொ.த. உயர் தரத்திற்கான கலை மற்றும் வர்த்தக பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தரம் 06 தொடக்கம் ஆங்கில வகுப்புக்களும் (bilingual) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஸுஹர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள விரும்புவோர் பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 11 வகுப்புக்களுடன் தனியொரு கட்டிடத்தில் பாடசாலை இயங்கி வந்த நிலையில், தொழிலதிபர் இல்யாஸ் கரீமின் நன்கொடையில் உருவான 04 மாடிக்கட்டிடம் அண்மையில் மீலாதுன் நபி தினமன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.