நாட்டுக்கு தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலரால் வெளியிடப்படும் அறிக்கைகளை பொறுப்புடன் நிராகரிப்பதாகவும், இவ்வாறான அடிப்படையற்ற கூற்றுக்களால் தமது நிறுவனத்திற்கு சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்துகிறது எனவும் இலங்கை பெற்றோலிய  சேமிப்பு முனையத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் அவை தனியார் பஸ்களுக்கு மட்டுமன்றி இயந்திரங்கள், புகையிரதங்கள் இபோச பஸ்கள் என்பவற்றையும் பாதித்திருக்கும் என்றும் எரிபொருட்களின் தரம் குறித்து இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை கொள்வனவு செய்வதில் இருந்து அவற்றை சந்தைக்கு விநியோகிக்கும் வரை  சுயாதீன பல்வேறு தடவைகள் பரிசோதனை செய்யப்படுவதாகவும்  தெரிவித்தார்.

ஏதாவது சந்தர்ப்பத்தில் சந்தேகம் ஏற்படின் குறித்த எரிபொருளின் மாதிரியை பரிசோதனை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.