“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்புத்  திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவில் ரண்பொகுணகமவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடமைப்பு உதவி மற்றும் வீடமைப்புக் கடன் ஆகியவற்றுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் தலைமையின் கீழ் நேற்று (05) நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப, பிரதமர், வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதல் மற்றும்  அறிவுறுத்தலின் பேரில், கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்புத்  திட்டம் மற்றும் வீட்டுக் கடன் வேலைத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தின், அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவில் 43 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவி மற்றும் வீட்டுக் கடன் ஆகியவற்றுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இங்கு “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்புத்  திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு விடமைப்பு உதவி காசோலைகளும், வீட்டுக் கடன் வேலைத் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு வீட்டை திருத்தி அமைப்பதற்காக வீட்டுக் கடன் காசோலைகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்தர ராஜபக்ஷ, அத்தனகல்ல பிரதேச சபை தலைவர் பிரியந்த புஷ்பகுமார, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக, அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் கவேஷ கல்பன உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2021.12.06

 







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.