கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் புதிய 3 மாடிக்கட்டிடம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரம் அளவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக பாடசாலையின் அதிபர் சர்ஜூன் தெரிவித்தார். 

மிக நீண்ட பிரயத்தனத்தின் விளைவாக சுமார் 8.5 கோடி ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், குறித்த கட்டிடத்தின் கீழ் மாடியில் அமைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடம் ஊரின் பல்வேறு வகையான நிகழ்வுகளை நடாத்துவதற்கு உதவியாக அமையும். 

கட்டிட திறப்பு விழா ஒன்றை செய்யும் போது ஊர் மக்கள் அனைவரும் இணைந்து அதனை சிறப்பாக செய்கின்ற போதுதான் அதனுடைய நன்றி உணர்வு பிரதிபலிக்கும். அது வெறுமனே பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக கருதாமல் ஊருக்கு தரப்பட்டதாக கருதி எல்லோரும் அதில் பங்குபற்ற முடியுமாக இருந்தால் எமக்கு மிகப்பெரிய வெற்றியை எதிர்காலத்தில் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.