2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

விண்ணப்பதாரர்கள், திணைக்கள இணையத்தளத்தில்  உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை மற்றும் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக ஒரு நாள் சேவையின் கீழ் பரீட்சை சான்றிதழ்களை வழங்குவது காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 24 முதல் காலவரையின்றி சேவை நிறுத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் பரீட்சை சான்றிதழ்களுக்கு இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.