தேசிய கராத்தே போட்டியில் SKMS மாணவர்கள் சாதனை

Rihmy Hakeem
By -
0

 

இம்மாதம் 22,23 ஆகிய தினங்களில் கொழும்பு பண்டாரகம உள்ளக அரங்கில் இலங்கை தேசிய கராத்தே சம்மேளனம் நடாத்திய போட்டியில் நிந்தவூர் SKMS மாணவியும் ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவர்களும் சாதனை புரிந்துள்ளனர்.

21 வயதினருக்கு கீழ் இடம்பெற்ற காட்டா போட்டியில் பாத்திமா நாஜீதா என்ற மாணவி 1ம் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தையும் மற்றும் மூத்தோருக்கான காட்டா பிரிவில் ACM.பிர்னாஸ் ஆசிரியர் 2ம் இடத்தை பெற்று வெள்ளிப்பக்கத்தையும் மேலும் 16/17 வயதுடையோருக்கான குமித்தே போட்டிப் பிரிவில் ELM.சாதிக், AS.முஹ்தார் மஹ்தி என்ற மாணவர்கள் 3வது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை வெற்றியீட்டியுள்ளனர். 

இவர்களுக்கான பயிற்சிகளை சிஹான் :Ms. வஹாப்தீன் வழங்கியிருந்ததுடன் நிந்தவூர் மாணவிக்கு சென்செய் காதர் றியாஸ் பயிற்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து வழிநடாத்திய கராத்தே சம்மேளன தலைவர் சிசிர குமார, செயலாளர் கீர்த்தி குமார மற்றும்  உறுப்பினர்கள் ஆலோசனைகள் வழங்கிய  சிஹான் விஜயராஜ் ISSKA ஆகியோருக்கு (முன்னாள் வடமாகாண கராத்தே சம்மேளனத் தலைவர்)  நன்றி தெரிவிக்கப்பட்டது.












கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)