நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்

கிவ்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. 

இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும்” என புதின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும்’ என்றார்.

நன்றி : தினந்தந்தி 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.