74வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு YMMA கஹட்டோவிட்ட கிளையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (05) கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட பிரதான சந்தியில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
அத்தனகல்ல பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கஹட்டோவிட்ட 369 கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட், கஹட்டோவிட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர், கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர், YMMA கஹட்டோவிட்ட கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் உட்பட ஏனைய உறுப்பினர்கள், Al - Hima நிறுவன தலைவர் அல்ஹாஜ் நூருல்லாஹ் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.