ஒரு சிறிய எண்ணக்கருவை ஒரு பெரிய மாற்றமாக முன்கொண்டு செல்லும் திறனை தன்னகத்தே கொண்டு புதிய காற்றாலை மாதிரியை உருவாக்கிய கெலும் வாதசிங்ஹவிற்கு ஆதரவாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொடுக்க தான் முன்வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இத்தகைய புதிய கண்டுபிடிப்பாளர்களை வலுப்படுத்தி முன்னேற்ற வேண்டிய பொறுப்பு நாடு என்ற ரீதியில் அனைவருக்கும் உண்டு என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் கருதி இதை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் புதிய காற்றாலை மின் உற்ப்பத்தி இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்த கெலும் வாதசிங்ஹ அவர்களின் காலியில் அமைந்துள்ள இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (28) விஜயம் செய்தார்.

அவரது புதிய நிர்மான வடிவமைப்பிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தேவையான ஒரு தொகை நிதியுதவிகளையும் வழங்கி வைத்தார்.புதிய உற்பத்தியை வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தான்  வழங்குவதாகவும் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு முன்னர்,எதிர்க்கட்சித் தலைவர் கெலும் வாதசிங்ஹவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.