நிட்டம்புவ, ஹொரகொல்ல பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட சண்டையில் கத்தி குத்துக்கு இலக்காகி 29 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான குறித்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.