Awareness Programs, அறிவுரைகள், பயான்கள் போதைக்கு அடிமையான ஒருவரை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்குமா? என்றால் இல்லை / கடினம்.

By: Dr. Ziyad Aia

மேலே சொன்ன முறைகள் புதிதாய் ஒருவரை அப்பழக்கத்தை நாடி செல்வதையும், குடும்பத்தில் ஒருவர் போதைக்கு அடிமையாகியுள்ளார் என்பதை அறிய உதவுமே தவிர அடிமையான ஒருவருக்கு பெரிய அளவில் பிரயோசனம் தராது.

முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புகைத்தல், மதுபாவனை போன்று புத்தி சொல்லி புரியவைத்து நிறுத்தக்கூடிய பழக்கம் அல்ல "போதைக்கு அடிமை" ஆதல் என்பது. 

"அடிமை - addiction' தான் விட நினைத்தாலும் தன்னை விடாது. போதைப்பழக்கத்தை வலிந்து விட நினைக்கும்போது உண்டாகும் Withdrawal Syndromes அந்நபரை Violent Behavior க்கு உள்ளாக்கி பெற்ற தாய் தந்தையரைக்கூட கொலை செய்யும் அளவுக்கு மாற்றி இருக்கிறது. இந்நாட்டிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆக போதைக்கு அடிமையானவரை அதிலிருந்து விடுவிக்க Rehabilitation & Treatment Centers களில் 40 நாள் , 4 மாசம் என தங்க வைத்து Treatment வழங்குவதால்  அதனை விட்டு விடுவிக்க முடியும். அதற்கும் அடிமையானவரின் ஒத்துழைப்பு அவசியம்.

கிழக்கு மாகாண முஸ்லீம் பிரதேசங்களை பொறுத்தவரை போதைக்கு அடிமையாகும் பிரதான நபர்களாக (Risk Group) உடல் உழைப்பினால் வேலை செய்யும் தச்சன் (Carpenter), மேசன், Mechanic etc  மற்றும் இதர கூலி தொழிலார்கள் உள்ளனர். 

ஆரம்பத்தில் வேலைக்களைப்பில் உடல் அசதியை போக்க போதையை பழகி அதற்கு அடிமையான பின் போதைப்பொருள் காலையில் உட்கொள்ளாவிடில் வேலை செய்ய முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.

போதையை விட்டால் தொழில் இல்லை. தொழிலை விட்டால் குடும்ப நிலை? இது ஒரு விஷச்சக்கரமாக தொடர்கிறது.

நாட்டில் சில போதைவஸ்து புனர்வாழ்வு நிலையங்கள், மாவட்ட ரீதியான Outreach Officers இருந்தபோதும் புனர்வாழ்வு நிலையங்களுக்கான Waiting List அதிகம் என்பதால் உடனடியாக அவற்றில் இடம் பெற்றுக்கொள்ள முடியாது. 

அவை பற்றிய விபரங்களுக்கு:

https://www.lankahealthtamil.com/rehabilitation-of-drug-addict-sri-lanka/

போதை பழக்கத்துக்கு அடிமையான பலருக்கு Rehabilitation வழங்க உதவிய அனுபவங்களில் இருந்து சொல்கிறேன். போதைக்கு அடிமையானவரை விடுவிக்க புத்திமதியை விட புனர்வாழ்வு அளித்தல், புனர்வாழ்வு அளிக்கும் காலப்பகுதியில் அவரது குடும்பத்துக்கு உதவுதல். இவை இரண்டுமேதான் வெற்றி அளிக்கும்.

3 அனுபவங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன்:

🛑 01. அம்பாறை மாவட்டத்தில் Carpenter தொழில் செய்யும் ஒரு நண்பர் தன்னிடம் வேலைக்கு வரும் இளைஞர் போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும், காலையில் போதையை உட்கொள்ளாவிட்டால் வேலை செய்ய முடியாதுள்ளதாகவும் முறையிட்டார். ஆனாலும், அந்நபர் போதையை விடவும் Rehabilitation க்கு உட்படவும் விரும்புவதாக சொன்னார்.

உடனே அரச அனுசரணையில் இயங்கும் Rehabilitation Centers களுக்கு தொடர்பு கொண்டபோது Waiting List மாதக்கணக்கில் இருப்பது தெரிந்தது. அப்பிராந்திய Outreach Officer ஐ தொடர்புகொண்டபோது இவ்வாறான நிலையில் Psychiatric வைத்தியர் ஒருவர் ஊடாக வீட்டிலிருந்தே 2 வாரங்களுக்கு கொடுக்கும் Treatment பற்றி சொல்லவும் அது ஆரம்பிக்கப்பட்டது. 

வீட்டிலிருந்து Treatment சாத்தியப்படவில்லை. ஒரு வார மருந்தை எடுத்து சென்றவர் பின்னர் வேலைக்கும் வரவில்லை. வீட்டில் விசாரித்துப்பார்த்தால் சொல்லாமல் Colombo க்கு சென்றுவிட்டார் என்ற தகவல் மட்டுமே வந்தது. அதன் பின் எந்த Updateஉம் இல்லை.

🛑 02. களுத்துறை மாவட்டத்தில் இருந்து இன்னொரு குடும்பஸ்தர் பற்றி அவரது நண்பர் ஊடாக அறியக்கிடைத்து. பல சிரமத்துக்கு மத்தியில் Nittambuwa Rehabilitation Centre இல் இணைக்கப்பட்டார்.

4 மாதங்கள் கடந்துவிட்டது. இப்போது தேறி தொழில் செய்யும் அளவுக்கு முன்னேறி உள்ளார். சில நாட்களில் வீடு திரும்பலாம். ஆனால் சூழல் மீண்டும் அவரை அதற்குள்  வீழ்த்தாமல் இருக்க பிரார்திப்போம்.

🛑 03. தன் கணவன் பலமுறை Rehabilitationக்கு அழைத்து செல்லப்பட்டும் அவர் அதனை மறுத்து வெளியாகிவிடுகிறார். Police இல் Complain பண்ணி சிறையில் அடைத்தாலாவது இப்பழக்கத்தை விடவைக்கலாமா? என கெஞ்சும் 3 பிள்ளைகளின் தாய்.

🛑 ஆக நாங்கள் செய்யக்கூடியது என்ன?

✅ 01. போதைக்கு அடிமையானவர்களை இனங்கண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகள் உண்டு என்பதை புரிய வைத்து அப் பிராந்திய Outreach Officer ஊடாக புனர்வாழ்வு நிலையங்களை நாடுதல்.

✅ 02. நாட்டில் மேலும் பல புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க வேண்டும்.

இதற்கு அரச தனியார் கூட்டு முயற்சியை மேற்கொள்ளல். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பிரத்தியேகமான Rehabilitation நிலையம் ஒன்றை உருவாக்க வேண்டும். 

மாட்டக்களப்பில் Vimochchanaa எனும் தனியார் NGO நிலையம் உள்ளபோதும் அங்கு பாரதூரமற்ற போதை பாவனைக்கு Rehabilitation வழங்கப்படுகிறது. Treatment வசதிகள் இல்லை. அத்தோடு இப்பிராந்தியத்துக்கு அது போதாது.

(Batticaloa Campus போன்ற ஒரு இடத்தை தற்காலிகமாகவேனும் பிரயோசனப்படுத்தலாம்.) 

புதிய Rehabilitation நிலையத்துக்கு மருந்துகள், உணவுகள் போன்றவை தனவந்தர்களால் (Sponsor) செய்யவேண்டிய நாட்டின் சூழ்நிலை இருந்தாலும் இந்நிலையங்கள் அரச அனுசரணையுடன் இயங்குவது சிறப்பு. 

✅ 03. போதைக்கு அடிமையானவர்களை Rehabilitationக்கு உட்படுத்தும் அதேவேளை அக்காலப்பகுதியில் அவரில் தங்கியுள்ள குடும்பத்துக்கு வாழ்வாதார உதவிகளை செய்ய முன்வரவேண்டும்.

✅ 04. பள்ளிவாசல்கள், சமூக அமைப்புகள் ஊடாக போதை வியாபாரிகளை இனங்கண்டு "மாற்றுவழிகள்" ஊடாக அதனை நிறுத்த வேண்டும். 

"இதெல்லாம் எதுக்கு? சட்டம் ஒழுங்கை பேணி போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுத்தாலே போதுமே." என்று கருத்து முன்வைப்போர் முதலில் முகநூல் Theory Classஐ விட்டு சமூகம் எனும் Practical Calss ஐயும் எட்டிப்பாருங்கள்.

By: Dr. Ziyad Aia

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.