கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருமாறு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இந்திக வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடை வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கம்பஹா வைத்தியசாலையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கொரோனா  பிரிவுகளில் சிகிச்சைப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.