க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கருத்தரங்கு
( மினுவாங்கொடை, நிருபர்)
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு, தமக்கு உகந்த கல்வித் துறையைத் தெரிவு செய்ய வழி காட்டும் செயலமர்வு ஒன்று, அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் வழி காட்டலில், நாளை (17) ஞாயிற்றுக் கிழமை காலை 08 மணி முதல் கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறும் என, கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை அறிவித்துள்ளது.
இச்செயலமர்வில், இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கற்ற ஆண், பெண் மாணவர்களும், அடுத்த வருடம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களும் கலந்து கொள்ள முடியும்.
அத்துடன், இச்செயலமர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் ஓன்றும், நாளை (17) பிற்பகல் 03 மணிக்கு நடைபெறும் எனவும், நிர்வாக சபை மேலும் அறிவித்துள்ளது.
(ஐ.ஏ.காதிர் கார்)