வாகன சாரதிகளுக்கு வாராந்தம் எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் அனுமதிச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உத்தரவாதமான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய அடையாள இட்டை இலக்கம் மற்றும் வாகன அனுமதிப்பத்திர இலக்க விபரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும். QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) தொழில்நுட்ப ஆதரவுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இந்த தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.